Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

Menu

கனகம் என்றால் தங்கம் என்று பொருள்படும். புஷ்பம் என்றால் மலர் என்று பொருள்படும்.ஆக, பொன்னிறமான மலர் போன்ற நிறத்தில் இக்கற்கள் கிடைப்பதால் இதனை கனகப்புஷ்பராகம் என்று அழைக்கிறார்கள்.இந்த ரத்தினத்தை புரூடகம் என்றும் அழைப்பர். மேலும் புஷ்பராகத்தின் கடினத்தன்மையும், கனகபுஷ்பராகத்தின் கடினத்தன்மையும் வேறு வேறாகும். அதேபோல் புஷ்பராகம் என்பது நவரத்தினத்தில் சேர்க்கப்படாத இரத்தினமாகவும், கனகபுஷ்பராகம் என்பது நவரத்தினங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கனகபுஷ்பராகம் குவிந்தம் என்னும் குடும்ப வகையைச் சேர்ந்ததாகும். புஷ்பராகம் என்பது கருங்கல் பாறைகளில் காஸிட்ரைட் என்றே தாதுப்பொருளுடன் சேர்ந்திருக்கும். இவை வளர்ச்சியடைந்த நிலையில் நல்ல ஒளியுடன் பிரகாசிக்கும் தன்மையுடைய கற்களாகத் திகழும்.

மூல மந்திரம்

ஓம் ப்றீம் ப்ரஹஸ்பதயே நமஹ

குறிப்பு :(19 தடவை ஓத வேண்டும் )

ஜோதிட பண்புகள்

கிரகம் : வியாழன்

ராசி : தனுசு,

பூரட்டாதி, விசாகம்

நாள் :வியாழன்

விளைவுகள் :

கண்களை ஆற்றும், உடல் அமைப்பை சுத்தப்படுத்தும் மற்றும் சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தும். இரத்த ஓட்ட அமைப்பை தூய்மையாக்கும் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆஸ்துமாவை குணப்படுத்தும்.திருமணம், வாய்ப்பு மற்றும் கல்விக்கு உதவுகிறது.

குறிப்பு :

கனகபுஷ்பராகம் அணியும் போது மறகதமும் வைரமும் அணியக்கூடாது .

 
W