Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

Menu

கடல்களின் அரசி என முத்து அழைக்கப்படுகின்றது. நல்ல தரமான முத்தானது மற்ற இரத்தினங்களை விட விளையுயர்ந்ததாகவும்,அழகில் சிறப்புடையதாகவும் திகழும்.தரம் வாய்ந்த,வர்ணம் நிறைந்த முத்துகள் கிடைப்பது அரிதாகும்.

கால்சியம் கார்பனேட் மற்றும் கார்பன்,ஹைட்ரஜன், ஆக்ஸிஷன் போன்ற தாதுக்கள் இணைந்ததே முத்தாகும்.எந்த ஒரு இரண்டு முத்துக்களும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதே நவமணித்துறை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.முத்து உறவுகளுக்கிடையே ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.திருமணங்களின் போது முத்தை பரிசாகக் கொடுபதால் அச்சுபக்காரியம் மிக வழுவான முறையில் நடைபெற இது பெரிதும் உதவுகின்றது.முத்துகளில் பலவகை இருந்ததாக சோழநாட்டு கல்வெட்டுகளில் செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டது.அவை வட்டம்,அனுவட்டம்,ஒப்புமுத்து,குறுமுத்து,நிம்போளம்,பயிட்டம்,அம்புமுத்து, கரடு,இரட்டை,சப்பத்தி .சக்கத்து,குளிர்ந்தநீர் மற்றும் சிவந்த நீர் என்பவையாகும்.

மூல மந்திரம்

ஓம் சோம் சோமாய நமஹ

குறிப்பு : (11 முறை ஓத வேண்டும் )

 ஜோதிட  பண்புகள்

 கிரகம் : சந்திரன்

ராசி :கடகம்

நட்சத்திரம் : ரோஹினி , ஹஸ்தம் , திருவோணம்

நாள் : திங்கள்

 விளைவுகள் :

உறவை உறுதியாக்கும். பெண் மாதாந்திர சுழற்சியினை ஒழுங்குப்படுத்தும். கர்ப காலத்தில் இது பெரிதும் உதவுகிறது.உரிமையாளர்களாக இருந்தால் அவர்களுக்கு இம்முத்தானது அதிர்ஷ்டம், அன்பு மற்றும் செழிப்பினை நமக்கு ஆசிர்வதிக்கின்றது. இருண்ட சகுனங்களைத் தரும் கனவுகளில் இருந்து விடுபட உதவும். நம்பிக்கை மற்றும் சுயமரியாதையை கூட்டுகின்றது. தீய சக்தியின் ஆதிக்கத்தை தடுக்கும் முக்கியமாக பயணங்களிகலன்   போது. உடலில் சக்கரை நிலையை ஒழுங்குப்படுத்தும்.

 குறிப்பு :

பூனை  கண் வடிவில் உள்ள முத்து கல்லை உபையோகிக்ககூடாது.

 

 
W