Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

Menu

நவரத்தினங்களில் ராஜா எனவும், நவரத்தினங்களில் மிக விலை உயர்ந்ததாகவும் வைரம் கருதப்படுகின்றது. நல்ல தரமான வைரம் அணிபவர்கள் 'அஸ்வமேத  யாகம் ' செய்த பலனை பெறுவார்கள் என்று புராணங்களில் தெரிவிக்கின்றன. நவரதினங்களிலேயே அதிகக் கடினத்தன்மைக் கொண்டது வைரமாகும். வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் மற்ற எந்த பொருட்களாலும் வைரத்தை அறுக்க முடியாது. பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி பாறைகளே வைரங்களாக மாறுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் மேற்பரப்பிலிருந்து காடுகள் நாளடைவில் இயற்கை சீற்றத்தால் பூமிக்கு அடியில் சென்றன. நூற்றுக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அடியில் இருக்கும் மரங்கள் பலவித நிலக்கரிப் பாறைகளாக மாற்றம் அடைந்து, பூமிக்கு மேலிருந்து கிடைக்கும் அழுத்தத்தினாலும், பூமிக்கு அடியில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தினாலும், பலவித ரசாயன மாற்றத்தினாலும் நிலக்கரி பாறைகள் வைரங்களாக மாறுகின்றன.

மூல மந்திரம்

ஓம் சம் சுக்ராய நமஹ

குறிப்பு : (16 தடவை ஓத வேண்டும் )

ஜோதிட பண்புகள்

கிரகம் :வெள்ளி

ராசி :ரிஷிபம்

நட்சத்திரம் :பரணி, பூரம், பூராடம்

நாள் : வெள்ளி

விளைவுகள் :

உரிமையாளரை இளமையாகவும், சந்தோஷமாகவும்  மற்றும் அழகாகவும் வைத்திருக்கும். புகழ், செல்வம் மற்றும் விழிப்புணர்வை தூண்டுகிறது. எலும்புகளை உறுதிப்படுத்துகின்றது.

 குறிப்பு :

 வைரத்துடன் மாணிக்கத்தையும், முத்தையும் சேர்த்து அணியக்கூடாது                              

 
W