Tamil
வரவேற்கிறோம்
வண்டியில் MYR0.00

நீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.

வைரமே உயிரோடு இயங்குவதால் இதனை வைடூரியம் என்கிறார்கள். வேப்பம் பழம் போல் கோத்திரமும், வெள்ளி நூல் சூத்திரமும் அமையப்பெற்ற இரத்தினம் எனவும் இதை அழைக்கின்றனர். இந்த இரத்தினமானது பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் வெள்ளை நிற ஒளியை வெளிவிட்டுக் கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலும் வைடூரியம் எனப் பெயர் வந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரரிவிக்கின்றன.

வைடூரியக் கற்கள் கிரிஸோபெரில் என்னும் குடும்ப வகையைச் சேர்ந்ததாகும். ஆனால் இதே போன்று வைடூரியக் கற்கள் ஸ்படிக வகை கற்களிலும் கிடைகின்றன. ஒரு அங்குல நீளமுடைய வைடூரியக் கல்லில் 60,000க்கும் மேற்பட்ட நூலிலைக் கோடுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோடுகள் ஒன்றுக்கொன்று இனையாகவும், குறுகலாகவும், கூர்மையாகவும் இருக்கின்றனவோ அவ்வளவுக்களவு சிறப்பான இரத்தினமாகக் கருதப்படுகிறது.

மூல மந்திரம்

ஓம் கேம் கேதுவே நமஹ

குறிப்பு : (18 முறை ஓத வேண்டும்)

ஜோதிட பண்புகள் :

கிரகம்          : கேது

ராசி               : மீனம்

நட்சத்திரம்  : அஸ்வினி, மகம், மூலம்

நாள்               : வியாழன்

விளைவுகள் :

புகழ் ,செல்வம், மற்றும் அதிர்ஷ்டத்தை தரும். கடவுள் பக்தி அதிகரிக்கும். அறிவாற்றல், படைப்பாற்றல்லை ஊக்குவிக்கும். கண் மூச்சு தொடர்பான நோய்களை குணப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.

குறிப்பு :

வைடூரியத்தை மாணிக்கத்துடனும், முத்துவுடனும் சேர்த்து அணிய கூடாது.

 
W